வடக்கு ஒளி என்று அழைக்கப்படும் 'சுவீடன் அரோரா' என்னும் அற்புத வானியல்

வடக்கு ஒளி என்று அழைக்கப்படும் சுவீடன் அரோரா என்னும் அற்புத வானியல்
X

ஸ்வீடன் அரோரா எனப்படும் வானியல் அதிசயம் 

வடக்கு ஒளி எனப்படும் ஸ்வீடன் அரோரா பொரியாலிஸ், சுவீடன் – பின்லாந்து நாடுகளுக்கு இடையே தோன்றியுள்ளது.

வடக்கு ஒளி என்றும் துருவ ஒளி என்றும் அழைக்கப்படும் 'சுவீடன் அரோரா' என்னும் அற்புத வானியல் நிகழ்வு சுவீடன்-பின்லாந்து நாடுகளுக்கு இடையேயான எல்லையில் உள்ள பஜாலா பகுதியில் தோன்றியது. சுவீடன் நாட்டு வானத்தை அலங்கரித்த இந்த அபூர்வ ஒளியானது, வண்ணங்கள் நடனமாடுவதைப் போல் தோற்றமளித்துள்ளது.


இந்த சுவீடன் அரோரா- 'வடக்கு ஒளி' என்பது சூரியனில் இருந்து மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மோதும்போது உருவாகும் இயற்கை நிகழ்வு ஆகும். இவை வடக்கு ஒளியானது பிங்க், பச்சை மற்றும் ஊதா நிறங்களிள் கோடுகளாக வானில் தென்படும். செப்டெம்பர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை இரவில் இந்த நிகழ்வை காணலாம்.

Tags

Next Story
ai based agriculture in india