ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்? வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா

ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்?  வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா
X

கிம் ஜோங்-யூன் மற்றும் விளாடிமிர் புடின் 

ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்தால் அதற்கு "ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என வட கொரியாவை அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

உக்ரைன் மீது 18 மாதங்களுக்கு மேலாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வருகிறது. அதேபோன்று மேற்கத்திய நாடுகளும் உதவி புரிந்து வருகின்றன.

அதேவேளையில் ரஷியாவிற்கு ஈரான், வடகொரியா, சீனா ஆகியவை உதவி புரிந்து வருகின்றன. ஆனால், வெளிப்படையாக உதவி செய்வதாக கூறவில்லை. இந்த மூன்று நாடுகளுக்கும் அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்கு மாஸ்கோவிற்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கினால், அதற்காக அவர்கள் சர்வதேச சமூகத்தில் ஒரு விலையைக் கொடுப்பார்கள்" என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே ஆயுத பேச்சுவார்த்தைகள் "சுறுசுறுப்பாக முன்னேறி வருவதாக" கூறியது, ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு ஜூலை மாதம் பியோங்யாங்கிற்கு சென்று பீரங்கி வெடிமருந்துகளை விற்க சம்மதிக்க வைத்தது.

வட கொரியா கடந்த ஆண்டு இறுதியில் வாக்னர் படைகளின் பயன்பாட்டிற்காக காலாட்படை ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு வழங்கியது, மேலும் விவாதிக்கப்படும் சாத்தியமான ஒப்பந்தம் ரஷ்ய துருப்புகளுக்கு இன்னும் பல ஆயுதங்களை வழங்கும் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

எந்தவொரு சாத்தியமான புதிய ஒப்பந்தங்களிலும் வட கொரியாவிலிருந்து "பல வகையான வெடிமருந்துகள்" மற்றும் மூலப்பொருட்கள் இருக்கலாம் என்று கிர்பி மேலும் கூறினார். ஈரானிடம் இருந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் பீரங்கிகளையும் ரஷ்யா பெற்றுள்ளது.

ஏற்கனவே, கொரியா தீபகற்பத்தில் அணுஆயுத கப்பலை அமெரிக்கா நிலைநிறுத்திய விவகாரத்தில் வடகொரியாவுக்கும் அமெரிக்கா-தென்கொரியாவுக்கும் (கூட்டு) இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் வடகொரிய மீது தாக்குதல் சதி நடத்தப்பட வாய்ப்புள்ளதால், தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்தை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அவ்வப்போது ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!