11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது... தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்
வடகொரியா அதிபராக கிம் ஜோங் உன் உள்ளார். அணுகுண்டு சோதனைகளை நடத்தி, அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக திகழும் இவர், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருபவர்.
இந்நிலையில், கிம் ஜோங் உன் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு, பலரையும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது. இவரது தந்தை கிம் ஜோங் இல், கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் காலமானார். அவரது நினைவு தினம் கடைபிடிக்கும் நிலையில், வடகொரிய நாட்டு மக்கள், அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என்பது தான் வடகொரிய அதிபர் பிறப்பித்துள்ள, இந்த வினோத உத்தரவாகும்.
மேலும், தந்தையின் நினைவு தின வாரத்தை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் பகுதி பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனவும், வட கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu