/* */

நோபல் பரிசு 2021: இயற்பியலுக்கு மூன்று பேருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது

2021ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இந்தாண்டு மூன்று பேருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நோபல் பரிசு 2021: இயற்பியலுக்கு மூன்று பேருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது
X

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்கியூரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹசில்மேன் (ஜெர்மனி), ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி)

2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இயற்பியல் துறைக்கு ஸ்கியூரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹசில்மேன் (ஜெர்மனி), ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.

புவியின் தட்பவெட்பம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த ஆய்விற்காகவும், மிகவும் சிக்கலான இயற்பியல் தன்மைகள் குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதற்கும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மொத்தப் பரிசுத் தொகையான சுமார் 8.22 கோடி ரூபாயில் பாதித்தொகையை இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி பெறுகிறார். மீதமுள்ள தொகை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன் ஆகியோருக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு, ரோஜர் பென்ரோஸ் (பிரிட்டன்), ரெயின்ஹார்ட் கென்சல் (ஜெர்மனி), ஆன்ட்ரியா கேஸ் (அமெரிக்கா) ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.

Updated On: 7 Oct 2021 3:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?