/* */

பொருளாதார நோபல் பரிசு: அமெரிக்க பெடரல் வங்கி முன்னாள் தலைவர் உள்படமூவருக்கு பகிர்ந்தளிப்பு

வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

பொருளாதார நோபல் பரிசு: அமெரிக்க பெடரல் வங்கி முன்னாள் தலைவர் உள்படமூவருக்கு பகிர்ந்தளிப்பு
X

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாக், டக்லஸ் டைமண்ட், ஃபிலிப் ஹெச்.டிப்விக் ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் பென் எஸ் பெர்னான்கே மற்றும் மற்ற இரு அமெரிக்க பொருளாதார அறிஞர்களுக்கு 2022ம் ஆண்டுக்குரிய பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் வங்கிகள் குறித்தும், நிதிச்சிக்கல் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். வங்கிச்சீர்குலைவு வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்ற அடிப்படையில் 3வல்லுநர்களும் ஆய்வு செய்தனர். குறிப்பாக வங்கிகள் ஏன் உள்ளன, சமூகத்தில் அதன் பங்கு என்ன, சரிவு என்ற வதந்தியால் வங்கிகள் எவ்வாறு பாதிப்படையும், அந்த பாதிப்பிலிருந்து எவ்வாறு குறைக்க முடியும் என்று ஆய்வு செய்தனர்.

இது மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தில் வங்கிகள் எவ்வளவு முக்கியமானவை குறிப்பாக நிதியியல் நெருக்கடியில் சிக்கியுள்ள போது வங்கிகளின் முக்கியம் ஆகியவற்றையும், வங்கிகள் ஏன் திவாலாகக் கூடாது என்பதை உணர்த்துகிறது இவர்களின் ஆய்வு முடிவுகள்.

1980 களின் முற்பகுதியில் பென் பெர்னான்கே, டக்ளஸ் டயமண்ட் மற்றும் பிலிப் டிப்விக் ஆகியோர் இந்த ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்டனர். நிதிச் சந்தைகளை ஒழுங்குபடுத்துவதிலும், நிதி நெருக்கடிகளைக் கையாள்வதிலும் அவர்களின் ஆய்வும், ஆராய்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நோபல் பரிசு அளிக்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.

Updated On: 10 Oct 2022 12:34 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்