/* */

2021 வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுகிறது

2021ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

2021 வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுகிறது
X

2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.4ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெஞ்சமின் லிஸ்ட் (ஜெர்மனி) மற்றும் டேவிட் மேக்மில்லன் (அமெரிக்கா) ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறு கட்டுமானம் என்ற பிரிவில் இவர்களின் சிறந்த ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது குறித்து நோபல் குழு, "மூலக்கூறுகளை உருவாக்குவது என்பது கடினமான கலை. பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் ஆகியோர் மூலக்கூறு கட்டமைப்பிற்கு சரியான புதிய கருவியை உருவாக்கியுள்ளார்கள். இது மருத்துவ ஆராய்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, வேதியியலின் வளர்ச்சிக்கு உதவும்" என்று கூறியுள்ளது.

2020ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இமானுவேல் ஷார்பான்தியே (பிரான்ஸ்), ஜெனிபர் ஏ. டோட்னா (அமெரிக்கா) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.

Updated On: 6 Oct 2021 12:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?