அமைதிக்கான நோபல் பரிசு: பத்திரிகையாளர்கள் இருவருக்கு பகிர்ந்தளிப்பு

அமைதிக்கான நோபல் பரிசு: பத்திரிகையாளர்கள் இருவருக்கு பகிர்ந்தளிப்பு
X

Courtesy: Twitter/ The Nobel Prize

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முராட்டா ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு விவரங்கள், கடந்த 4ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைவரும் எதிர்ப்பார்த்த, நடப்பு ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பத்திரிகையாளர்களான பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி மரியா ரெஸ்ஸா மற்றும், ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முராட்டா ஆகிய இருவருக்கும், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க இருவரும் எடுத்த முயற்சிக்காக, இவ்விருது பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture