இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு
X
நம்பிக்கையில்லாதீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது.அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 5 க்கு எதிரானது-துணைசபாநாயகர்

நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 5க்கு எதிரானது என துணை சபாநாயகர் அறிவிப்பு.

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசின் மீதான நம்பிக்கையில்லாத தீர்மானம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, ``நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்" என்று இம்ரான் கான் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசை கலைக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராகக் குரலெழுப்பி வந்தன. அதைத்தொடர்ந்து சென்ற வாரம், இம்ரான் கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த தீர்மானத்தின்போது இம்ரான் கான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த MQM கட்சி, தங்களின் ஆதரவை எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அளித்ததால், நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 இடங்களில் இம்ரான் கான் அரசின் பலம் 164-ஆகக் குறைந்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பலம் 177-ஆக உயர்ந்தது. இந்த நிலையில், முன்னதாக ஏப்ரல் 3-ல் இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியபடியே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அப்போது பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் கான், ``இது பாகிஸ்தான் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதால் இம்ரான் கான் அரசின் மீதான இந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் நிராகரிகரிப்படுகிறது" என உத்தரவிட்டார். மேலும், நாடாளுமன்றத்தை ஏப்ரல் 25-ம் தேதி வரை ஒத்திவைப்பதாகவும் காசிம் கான் கூறினார்.

இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான், ``நம்பிக்கையில்லா தீர்மானத்தை கலைக்கும் முடிவு சரியானதே. எனது அரசை கலைக்க வெளிநாட்டு சதி நடந்தது அம்பலமாகியுள்ளது. எனவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். மேலும் தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும். தங்களை யார் ஆளவேண்டும் என்பதை மக்களே முடிவு செய்யட்டும்" என்று பேசினார்.

நாடாளுமன்றத்தில் இந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால், ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கிடையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றதுக்கு கொண்டு செல்லவிருப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பு கூறிவருகின்றன.

Next Story
ai solutions for small business