விண்ணில் இருக்கும் சிறுகோளைத் தகர்க்க நாசா ராக்கெட்டை ஏவியுள்ளது

நாசா ஏவியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9
பூமியை அச்சுறுத்தும் வகையில் வேகமாக வரும் விண்வெளிப் பாறையைத் தகர்க்க முடியுமா என்பதைச் சோதிப்பதற்காக ஒரு சிறுகோள் மீது மோதி நொறுக்கும் பணியில் ஒரு விண்கலத்தை நாசா செவ்வாய்க்கிழமை இரவு ஏவியது.
Double Asteroid Redirection Test என்பதன் சுருக்கமான DART விண்கலம், 330 மில்லியன் டாலர் செலவில் SpaceX Falcon 9 ராக்கெட்டில் இருந்து வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து ஏவப்பட்டது
எல்லாம் சரியாக நடந்தால், 2022 செப்டம்பரில் அது 15,000 மைல் (24,139 கிமீ) வேகத்தில் டிடிமோஸ் சுற்றுப்பாதையில் உள்ள டிமார்போஸ் என்ற சிறுகோள் மீது மோதிவிடும். "இது சிறுகோளை அழிக்கப் போவதில்லை, ஆனால் ஆராய்ச்சியை மேம்படுத்த உதவும்" என்று திட்டத்தை நிர்வகிக்கும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்தின் பணி அதிகாரி நான்சி சாபோட் கூறினார்.
டிமார்போஸ் ஒவ்வொரு 11 மணிநேரம், 55 நிமிடங்களுக்கு டிடிமோஸின் ஒரு சுற்றுப்பாதையை நிறைவு செய்கிறது. சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றம் பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் கண்காணிக்கப்படும். சிறுகோள்களை அடைய DART 10 மாதங்கள் எடுக்கும். மோதல் பூமியிலிருந்து 6.8 மில்லியன் மைல்கள் (11 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் நிகழும்.
DART எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?
DART நுட்பம் மூலம் பூமியில் பேரழிவு ஏற்படுத்த சாத்தியக்கூறுகளுடன் உள்ள சிறுகோள்களின் போக்கை மாற்றுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். அதன் மூலம் சிறுகோள் பூமி மீது மோதுவது தவிர்க்கப்படும் விஞ்ஞானிகள் தொடர்ந்து சிறுகோள்களை ஆராய்ந்து வருகிறார்கள். அவை பூமியை தாக்கக் கூடுமா என்பதைத் தீர்மானிக்க அவற்றின் பாதைகளைத் திட்டமிடுகிறார்கள்.
"தற்போது கண்டறியப்பட்ட சிறுகோள்கள் மூலம் பூமிக்கு ஆபத்து இல்லை, பூமிக்கு அருகாமையில் சிறுகோள்கள் அதிக அளவில் உள்ளன " என்று நாசாவின் கிரக பாதுகாப்பு அதிகாரி லிண்ட்லி ஜான்சன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu