ஓராண்டுக்கு பிறகு இந்தோனேசியாவின் மவுண்ட் செமேரு எரிமலை வெடித்தது

ஓராண்டுக்கு பிறகு இந்தோனேசியாவின் மவுண்ட் செமேரு எரிமலை வெடித்தது
X
இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் உள்ள செமரு எரிமலை அதன் கடைசி பெரிய வெடிப்புக்கு சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் வெடித்தது

இந்தோனேசியாவின் செமேரு மலை ஞாயிற்றுக்கிழமை வெடித்ததால், வானத்தில் ஒரு மைல் தூரத்தில் சூடான சாம்பல் மேகங்களை உமிழ்ந்து, எரிமலை குழம்புகள் வழிந்தோடின. இதன் காரணமாக உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையை அதிகாரிகள் விடுத்துள்ளனர்

தலைநகர் ஜகார்த்தாவிற்கு தென்கிழக்கே 800 கிலோமீட்டர் (500 மைல்) தொலைவில் உள்ள இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் உள்ள மிக உயரமான மலையின் வெடிப்பு, அதன் கடைசி பெரிய வெடிப்பு நடந்து சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு வெடித்ததால் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள மக்களை வெளியேற்றத் தூண்டியது.

எரிமலையின் செயல்பாடு அதிகரித்துள்ளதால், அந்தப்பகுதியில் மக்கள் யாரும் இருக்க வேண்டாம் என எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

3,676 மீட்டர் (12,000 அடி) எரிமலையின் உச்சியில் எரிமலை குளம்புகளால் ஏற்பட்ட "சூடான பனிச்சரிவுகள்" வெடித்தபின் அவை கீழே சரிந்தன என்று தேசிய பேரிடர் தணிப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வெடிப்பு ஏற்பட்ட உடனேயே உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் அச்சுறுத்தல் நிலை நான்காக உயர்த்தப்பட்ட பின்னர், அந்தப் பகுதியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்துக்கு யாரும் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெளியேறும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு தங்குமிடங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியான படங்கள், வெளியேற்றப்பட்டவர்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், பள்ளியில் தஞ்சம் அடைவதைக் காட்டியது. எரிமலையின் பள்ளத்திலிருந்து ஒரு பெரிய கருமேகம் உயர்ந்து, வானத்தை மூழ்கடித்து, அருகிலுள்ள கிராமங்களில் சூரியனைத் தடுப்பதைக் காட்டியது. இதனிடைய பருவமழை பெய்ததால், கிராமங்கள் பருவமழையால் பாதிக்கப்பட்டு, மழைப்பொழிவு எரிமலை சாம்பலுடன் கலந்தது .

எரிமலை சாம்பல் பயணிக்கும் திசையில் ஒரு ஆற்றின் குறுக்கே 13 கிலோமீட்டர் தென்கிழக்கு பகுதியைத் தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. "நிறைய மக்கள் வெளியேறத்தொடங்கியுள்ளனர்," என்று எரிமலை அமைந்துள்ள லுமாஜாங்கின் உள்ளூர் நிர்வாகத் தலைவர் கூறினார்.

மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான இரண்டு கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களை வெளியேற்றியுள்ளனர் பேரிடர் தணிப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஒகினாவா மாகாணத்தின் தெற்கு தீவுகளான மியாகோ மற்றும் யாயாமாவில் சுனாமி ஏற்படக்கூடும் என்று ஜப்பானின் வானிலை நிறுவனம் முன்னதாக எச்சரித்திருந்தது, கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது,

வெடிப்புக்குப் பிறகு இணையம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைபேசி சிக்னல்கள் சீர்குலைந்தன. பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களுக்கு மாசுபட்ட காற்றின் அச்சுறுத்தல் காரணமாக உள்ளூர் மீட்பு நிறுவனம் பொதுமக்களுக்கு இலவச முககவசங்களை விநியோகித்தது.

செமேரு மலை கடைசியாக சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு வெடித்ததில், குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர், 5,000 க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியது.

பேரழிவு முழு தெருக்களையும் சேறு மற்றும் சாம்பலால் நிரப்பியது, அது வீடுகள் மற்றும் வாகனங்களை விழுங்கியது, கிட்டத்தட்ட 10,000 மக்கள் தஞ்சம் புகுந்தனர்.

கடந்த ஆண்டு வெடிப்புக்குப் பிறகு புனரமைக்கப்பட்ட பகுதியில் இரண்டு மாவட்டங்களை இணைக்கும் பாலம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடுமையாக சேதமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டிசம்பர் 2020 இல் முந்தைய பெரிய வெடிப்புக்குப் பிறகு செமருவின் எச்சரிக்கை நிலை அதன் இரண்டாவது மிக உயர்ந்த மட்டத்தில் இருந்தது, இது ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற கட்டாயப்படுத்தியது .

இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமர்ந்திருக்கிறது, அங்கு கண்ட தட்டுகளின் சந்திப்பு அதிக எரிமலை மற்றும் நில அதிர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்துகிறது. தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டம் தேசத்தில் கிட்டத்தட்ட 130 செயலில் எரிமலைகள் உள்ளன.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள ஜலசந்தியில் உள்ள ஒரு எரிமலை 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெடித்தது, நீருக்கடியில் நிலச்சரிவு மற்றும் சுனாமியால் 400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு