மொராக்கோ நிலநடுக்கம்: 2 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு
மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் மீட்புக்குழுவினர்.
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் மரகேஷிலிருந்து தென்மேற்கே 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் இரவு 11:11 மணிக்கு (2211 GMT) ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மராகேஷில் உள்ள மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். மொராக்கோ நாட்டில் இன்றுவரை ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கம் அண்டை நாடான அல்ஜீரியாவிலும் உணரப்பட்டது. அங்கு அல்ஜீரிய குடிமைத் தற்காப்பு எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று கூறியது.
சக்திவாய்ந்த நிலடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் 2,012 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல், அண்டை நாடான அல்ஜீரியாவிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மொராக்கோ தலைநகர் ரபாத் முதல் மாரகெச் வரை நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளிலும் பயங்கர பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2004 ஆம் ஆண்டு மொராக்கோவின் வடகிழக்கு பகுதியில் அல் ஹொசிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 628 பேர் உயிரிழந்ததும் 926 பேர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu