அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி
அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்னும் மீளாத நிலையில், அங்கு ஒருவருக்கு அபூர்வமான குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
மசாசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர். சமீபத்தில் அவர் நண்பர்களை சந்திப்பதற்காக தனியார் வாகனத்தில் கனடா சென்று வந்துள்ளார். இந்த ஆண்டு அமெரிக்காவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இப்போதுதான் முதன்முதலாக உறுதியாகி உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து அங்கு குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளது. இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் நாடுகளிலும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கு காய்ச்சல் தீவிரமாகிறபோது, மரணம் நேரிடும். 10-ல் ஒருவருக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு மரண அபாயம் அதிகமாக உள்ளது. இந்த நோயின் அறிகுறிகள் காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளம் போன்றவை ஆகும்.
ஆப்பிரிக்காவில் கொறித்துண்ணிகள் அல்லது சிறிய விலங்குகள் கடித்து இந்த பாதிப்பு பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தி்ல் இது எளிதாக மக்களிடையே பரவுவதில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu