மிஸ் வேர்ல்டு 2021 போட்டி ஒத்திவைப்பு

மிஸ் வேர்ல்டு 2021 போட்டி ஒத்திவைப்பு
X
2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்திற்கான இறுதிப் போட்டி , அழகிகள் பலருக்கு கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான உலக அழகி இறுதிப் போட்டி, அமெரிக்காவுக்கு சொந்தமான போர்டோ ரிகோ தீவின் தலைநகர் சான் ஜுவானில் நேற்று முன்தினம் இரவு தொடங்க இருந்தது. ஆனால், இதில் பங்கேற்கும் இந்திய அழகி மானசா வாரணாசி உட்பட 17 அழகிகள், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, போட்டியை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அழகி போட்டி நிர்வாகம் கூறுகையில், டிரஸிங் அறை மற்றும் மேடைகளில் கொரோனா தொற்று பரவியிருக்கலாம்.தொற்றால் பாதிக்கப்பட்ட அழகிகள், நிர்வாகிகள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, 90 நாட்களுக்கு இந்த போட்டியும், ஒளிபரப்பும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!