விமானத்தில் எரிச்சலூட்டிய சக பயணியை 'நைய புடைத்த' மைக் டைசன்
சான்பிரான்ஸ்சிகோ நகரிலிருந்து, புளோரிடாவிற்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார் மைக் டைசன். அப்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் மைக் டைசனிடம், செல்பி எடுப்பதும் வாட்டர் பாட்டிலை எரிவதுமாக எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மைக் டைசன், அந்த இளைஞரை சரமாரியாக தாக்கும் வீடியோ வைரலாகி வருது.
மைக் டைசன் சான்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் தொடர்ந்து மைக் டைசனை தொந்தரவு செய்வது போல பேசிகொண்டே இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மைக் டைசன் தன் சீட்டில் இருந்து எழுந்து, பின் இருக்கையில் இருந்த பயணியின் முகத்தில் சராமாரியாக தாக்குகிறார். அதன்பின் முகத்தின் ரத்த காயத்துடன் அந்த பயணி சில முக பாவனைகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து சக பயணிகள் கூறுகையில், மைக் டைசன் அந்த பயணியை அமைதியாக இருக்கும்படி கூறிவந்தார். ஆனால் அந்த பயணியோ அவரை தொந்தரவு செய்தபடி காதில் கத்தியபடியே இருந்தார். இதனால் டைசன் அவரை தாக்கினார். பின்னர் விமானம் கிளம்புவதற்கு முன் மைக் டைசன் விமானத்தில் இருந்து வெளியேறினார் என கூறியுள்ளனர்.
மைக் டைசன் ஏற்கனவே அவருடைய வன்முறை நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர், 1997ம் ஆண்டு ஒருவரது காதை மைக் டைசன் கடித்து துப்பியது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu