பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலே காலமானார்

பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலே  காலமானார்
X

பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான பீலே.

பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான பீலே தனது 82வது வயதில் நேற்று காலமானார்.

பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான பீலே தனது 82வது வயதில் நேற்று காலமானார். பீலேவின் மகள் கெலி நாசிமென்டோ இன்ஸ்டாகிராமில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் புற்றுநோய் கண்டறியப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்தனர். புற்றுநோய் அதிகரித்து உடலின் சில பாகங்களுக்கு பரவி நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டு பீலேவை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.

இவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் 'அனைத்து அளவுகளிலும்' தடுப்பூசி போடப்பட்டது. கீமோதெரபி அவரை மிகவும் மோசமாக மாற்றியதால், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்திருப்பதாகவும், ஆபத்தான நிலையில் பீலேவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. பீலே குணமடைய உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான பீலே தனது 82வது வயதில் நேற்று காலமானதாக பீலேவின் மகள் கெலி நாசிமென்டோ இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் உலக அளவில் உள்ள அவரது ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

வரலாற்றில் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படும் பீலே என்றும் அழைக்கப்படும் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ, நான்கு உலகக் கோப்பைகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்றார் - 1958, 1962, 1970. அவர் 14 ஆட்டங்களில் 12 கோல்களையும் அடித்துள்ளார். பீலே தனது 21 வருட வாழ்க்கையில் மொத்தம் 1,283 கோல்களை அடித்துள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future