சாட் ஜிபிடி உதவியுடன் தவறான தகவல்: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட வழக்கறிஞர்

சாட் ஜிபிடி உதவியுடன் தவறான தகவல்: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட வழக்கறிஞர்

சாட் ஜிபிடி உதவியுடன் தவறான தகவல்களை வழங்கிய வழக்கறிஞர் - காட்சி படம் 

சாட் ஜிபிடி உதவியுடன் தவறான தகவல் வழங்கிய வழக்கறிஞர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் மன்னிப்பு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

சட்டத் தொழில் உட்பட பல தொழில்களில் உள்ள நிபுணர்களுக்கு ChatGPT பயனுள்ளதாக இருக்கும் அதே வேளையில், அது வரம்புக்குட்பட்டது மற்றும் நம்பகத்தன்மையற்றது என்பதை நிரூபித்துள்ளது.

நியூயார்க்கில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் விமானத்தில் உணவுப் பொருள்களை கொண்டு வரும் ட்ராலி தனது கால் முட்டியில் மோதி தனது முழங்காலில் காயம் அடைந்ததாகக் கூறி, கொலம்பிய ஏர்லைன் ஏவியன்கா மீது ராபர்டோ மாதா என்பவர்கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி வழக்கறிஞர் ஒருவர் வாதிட்ட நிலையில் அவர் இதற்கு முன் இதே போன்ற வழக்குகளில் அளித்த தீர்ப்புகள் குறித்து பார்த்த ஆவணங்களை தாக்கல் செய்தார்.

டெல்டா ஏர்லைன்ஸ் கொரியன் ஏர்லைன்ஸ் உள்பட பல விமான நிறுவனங்களின் பெயர்கள் அதில் இருந்ததை அடுத்து அந்த வழக்கறிஞர் இந்த விபரங்களை சாட் ஜிபிடிமூலம் எடுத்துள்ளதாக தெரியவந்தது.

ஆனால் சாட் ஜிபிடி மூலம் எடுக்கப்பட்ட அந்த விவரங்கள் தவறானது என்று தெரியவந்ததை அடுத்து தான் திரட்டிய தகவல்கள் தவறானது என ஒப்புக்கொண்டு அவர் நீதிபதி விட மன்னிப்பு கூறினார்.

இது குறித்து நீதிபதி கூறுகையில், வாதியின் வழக்கறிஞர் தாக்கல் செய்த சமர்ப்பிப்பு, இல்லாத வழக்குகளின் மேற்கோள்களால் நிரம்பியுள்ளது... சமர்ப்பிக்கப்பட்ட ஆறு வழக்குகள் போலி மேற்கோள்கள் மற்றும் போலியான உள் மேற்கோள்களுடன் போலி நீதித்துறை முடிவுகளாகத் தோன்றுகின்றன. வாதியின் ஆலோசகர் சமர்ப்பித்த மற்ற ஐந்து முடிவுகளும் இதே போன்ற குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன, மேலும் அவை போலியானவை என்றும் தோன்றுகிறது. சாட் ஜிபிடி தளத்தில் ஒரு விஷயத்தை தேடினால் அது தவறான தகவல்களை அளிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் எனவே அந்த தகவலை வைத்து நீதிமன்றத்தில் வாதிட கூடாது என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

Tags

Next Story