பிரான்ஸ் நகரசபையில் முக்கிய தீர்மானம்

பிரான்ஸ் நகரசபையில் முக்கிய தீர்மானம்
X

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிஸின் புறநகர் பகுதியிலுள்ள இவ்றி-சூர்- சென் (Ivry-sur-Seine) நகர சபையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானம் குறித்த நகரசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.இவ்றி-சூர்-சென் நகரசபை மேயர், நகரசபை பிரதி மேயர், நகரசபை உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவுடன் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுள்ளது

குறித்த தீர்மானத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டதாகவும், இலங்கை அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி, சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழம் தான் நிரந்தர அரசியல் தீர்வாக இருக்க முடியும் எனவும் கூறப்படுகின்றது.ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வின் போது இலங்கை இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்பில் இது சம்பந்தமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பரிஸில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது, இவ்றி-சூர்-சென் நகரசபை , தமிழ் சங்கங்கள், இறுதிக்கட்ட போரின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் துயரங்களை, துன்பங்களை பற்றி சுட்டிக்காட்டி எடுத்துரைக்கப்பட்டது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!