கென்யாவில் அதிகரிக்கும் மது, போதை பழக்கம்: பார்களுக்கு விரைவில் தடை

பைல் படம்.
கென்யாவில் மது அருந்துவதைக் குறைக்கும் முயற்சியில், அந்நாட்டின் துணைத் தலைவர் ரிகாதி கச்சகுவா, ஒரு ஊருக்கு ஒரு மதுக்கடையை மட்டுமே அனுமதிக்குமாறு மாவட்ட அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய கென்யாவில் ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் தொற்றுநோய் பிரச்சனையுடன் பொதுமக்கள் போராடிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான கட்டுப்பாடற்ற பார்கள், பப்கள் மற்றும் மலிவான, சட்டவிரோத மதுபான பார்கள் இயங்கி வருவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருவதாக அந்நாட்டின் துணைத் தலைவர் ரிகாதி கச்சகுவா தெரிவித்துள்ளார்.
எனவே "பார் மற்றும் உணவகங்கள் ஒரு ஊருக்கு ஒன்று மட்டுமே செயல்பட வேண்டும். மீதமுள்ளவை மூடப்பட்டு மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க நிர்வாகிகள் இருக்கும்போது சட்டவிரோத மதுபான விற்பனையால் குழந்தைகள் கொல்லப்படுவதை நாங்கள் பார்க்க முடியாது. இது போன்ற தேவையற்ற உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டு வருவதை உறுதிசெய்ய முதல்வர்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என கச்சகுவா கூறினார்.
மேலும் புதிய மதுபான கடைகள், பார்கள், பப்களை அமைக்க உரிமம் பெறுவதில் பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்த தற்சமயம் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதன் முடிவில் புதிய பார்களை திறக்க கடும் சட்ட திட்டங்கள் வகுக்கப்படும். இதன் மூலம் இளைஞர்கள், குழந்தைகள் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் பாதுகாக்க முடியும் என நம்பப்படுகிறது. இவ்வாறு ரிகாதி கச்சகுவா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu