அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றார்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்
அமெரிக்கா அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன்,79 பதவி வகிக்கிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்,47 பதவி வகிக்கிறார். இன்று (நவ.20) அதிபர் ஜோ பைடனுக்கு 79 வது பிறந்த நாள்.
இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக, அதிபர் ஜோ பைடன் திடீரென வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெருங்குடல் சிகிச்சை தொடர்பாக அனஸ்தீசியா கொடுத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சையிலிருந்து குணமடையும் வரை அதிபருக்கான அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு தற்காலிகமாக வழங்கி உத்தரவிட்டார்.
பின்னர் சிகிச்சையிலிருந்து ஜோ பைடன் குணமடைந்து திரும்பினார். அவர் திரும்பும்வரை ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க (பொறுப்பு) அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார். சுமார் 1.25 மணி நேரம் அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் இருக்கையில் கமலாஹாரிஸ் அமரவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு ஜோ பைடன் மீண்டும் அமெரிக்க அதிபர் பணியை தொடங்கினார்.
அமெரிக்காவில் பெண் அதிபராக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றார். அமெரிக்க அரசியலமைப்பு வரலாற்றில் இது போன்று தற்காலிக அதிபர் பொறுப்பு நிகழ்வு 2005, 2007 ஆண்டில் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் அதிபராக இருந்த போது நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu