அணு உலையின் கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான்

அணு உலையின் கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான்
X

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவுகோலில் 9.0 புள்ளிகள் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.‌மேலும் உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது.

மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்ததால் உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்தன.இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது.1986-ம் ஆண்டு ரஷியாவில் ஏற்பட்ட செர்னோபில் அணு உலை விபத்தை தொடர்ந்து உலகிலேயே 2-வது மிகப்பெரிய அணுஉலை விபத்தாக வரலாற்றில் இது பதிவானது.

கழிவு நீரை கடலில் விட முடிவு 10 ஆண்டுகள் கடந்தும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் தாக்கத்தை இன்னமும் கக்கி கொண்டிருக்கிறது அந்த உலை.இதனிடையே புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகள் நிறைந்த சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவு நீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே அணு உலையின் கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான் அரசின் முடிவுக்கு சர்வதேச அணுசக்தி முகமை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல் ஜப்பானின் இந்த முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஜப்பான் அரசின் இந்த முடிவுக்கு சீனா,தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் உள்ளூர் மீனவர்களும், அந்த நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,மற்றும் ஜப்பான் அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்துள்ளன.

அணு உலையின் கழிவு நீரை கடலில் கலந்தால் அது கடல் வளத்தை முற்றிலுமாக அழிக்க வாய்ப்புள்ளது என்றும் மேலும் அது மனித மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கிரீன்பீஸ் என்கிற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.

பூகம்பத்திற்குப் பிறகு மூன்று உலைக் கட்டிடங்களையும் தகர்த்த வெடிப்புகளால் வளிமண்டலத்தில் உமிழப்படும் 538.1 பெட்டாபெக்வெரல்களின் கதிரியக்கத்தின் மேல் கதிர்வீச்சு கூடுதல் வெளியீடு வரும்.1986 செர்னோபில் அணுசக்தி பேரழிவால் வெளியிடப்பட்ட மதிப்பிடப்பட்ட கதிர்வீச்சில் பத்தில் ஒரு பங்காகும்.ஃபுகுஷிமா கதிர்வீச்சு மனிதர்கள் மீது குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தியது, இருப்பினும் முன்னெச்சரிக்கை வெளியேற்றங்கள் எதிர்பாராத சமூக மற்றும் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தின.கதிரியக்கப் பொருட்களின் பெரும்பகுதி பசிபிக் பெருங்கடலில் விழுந்தது,

ஏனெனில் காற்று வீசியது.அசுத்தமான மீன்கள் பற்றிய கவலைகள் பிராந்திய மீன்பிடித் தொழிலை பேரழிவிற்கு உட்படுத்தின. இப்பகுதியில் இருந்து கடல் உணவுக்கான தேவை படிப்படியாக மீண்டுள்ளது, ஆனால் அசுத்தமான தண்ணீரை வெளியிடுவது இப்பகுதியில் இருந்து கடல் உணவு பற்றிய பொதுமக்களின் அச்சத்தை மீண்டும் தூண்டும் என்று மீன்வள அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!