Israel Palestine War,: 8ம் நாளாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்: 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Israel Palestine War,: 8ம் நாளாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்: 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
X
Israel Palestine War: இஸ்ரேல் – ஹமாஸ் போர் 8ம் நாளாக தொடரும் நிலையில் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Israel Palestine War: இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இன்று 8ம் நாளாக நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் இந்தப்போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த 1948 முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் கடுமையான போரின் சமீபத்திய ரத்தம் தோய்ந்த அத்தியாயம் இது.

பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என பொதுமக்களுக்கு இஸ்ரேல் கெடு விடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது 5,000க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.


இதனையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா மீது தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும், எனவே காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறும் இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். காசா மக்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு ஒருபோதும் அஞ்ச வேண்டாம். அனைவரும் துணிச்சலுடன் செயல்படுங்கள் என்று ஹமாஸ் அமைப்பினர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், காசா மக்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். காசா பகுதிக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்திவிட்டது. இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் படுகாயமடைந்த ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். 8-வது நாளாக தொடரும் இந்த போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!