சீனாவுக்குப் போட்டியாக ஐரோப்பாவின் டிஜிட்டல் யூரோ நாணயம் அறிமுகம்
ஐரோப்பாவின் டிஜிட்டல் யூரோ நாணயம்
சீனாவுக்குப் போட்டியாக ஐரோப்பாவின் டிஜிட்டல் யூரோ நாணயம் அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் யூரோ திட்டத்தைப் பயன்படுத்துவதிலும், சேமிப்பதிலும் உள்ள சிக்கல்களையும், ஆபத்துகளையும் ஆய்வு செய்து வரும் ஐரோப்பிய மத்திய வங்கி சோதனை அடிப்படையில் தற்போது அறிவித்துள்ளது.
உலகிலேயே முதல் முறையாக, சில மாதங்களுக்கு முன்னர் சீனா டிஜிட்டல் கரன்சியை மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் டிஜிட்டல் கரன்சி தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. அந்தவகையில், தற்போது சீனாவுக்குப் போட்டியாக ஐரோப்பாவும் டிஜிட்டல் கரன்சியான டிஜிட்டல் யூரோ நாணயத்தை முதற்கட்டமாக மக்கள் மத்தியில் சோதனைக்காக அறிமுகம் செய்துள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கி, இந்த புதிய டிஜிட்டல் யூரோ நாணயத்தின் அதிகாரப்பூர்வமாகச் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. மக்கள், கொரோனா காலத்தில் அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை பயன்படுத்தினர், இதேபோல் பல கோடி பேர் கிரிப்டோ கரன்சியில் அதிக அளவில் முதலீடு செய்தனர். இந்த மாற்றத்தைத் தடுக்கவே தற்போது டிஜிட்டல் நாணயங்களை உலக நாடுகள் அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளன.
இந்த டிஜிட்டல் யூரோ என்பது கிரிப்டோ கரன்சி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைவரும் பயன்படுத்தும் யூரோ நாணயத்தை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தும் திட்டம்தான் இந்த டிஜிட்டல் யூரோ. இது சீன உட்பட அனைத்து நாட்டின் டிஜிட்டல் நாணயத்திற்கும் பொருந்தும் என கூறப்படுகிறது.
பாதுகாப்பான பணப் பரிமாற்றம் டிஜிட்டல் யூரோ மூலம் பணத்தை எளிதாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த முடியும். இதேபோல் பணத்தை அரசு சிறப்பான முறையில் டிராக் செய்யப்படுவது மட்டும் அல்லாமல் கருப்பு பணத்தையும் கட்டுப்படுத்த முடியும். மேலும், இந்த டிஜிட்டல் யூரோ மூலம் தங்களது ஸ்மார்போன், ஸ்மார்ட்கார்டு மூலம் அனைத்து இடத்திலும் யார் வேண்டுமானாலும் பணத்தைச் செலுத்த முடியும்.
இதனால் வெளிநாட்டுப் பேமெண்ட் நிறுவனங்களான மாஸ்டர் கார்டு, விசா கார்டு போன்ற நிறுவனங்களை நம்பியிருக்கத் தேவையில்லை. இந்த டிஜிட்டல் யூரோ திட்டத்தைப் பயன்படுத்துவதிலும், சேமிப்பதிலும் உள்ள சிக்கல்களையும், ஆபத்துகளையும் ஆய்வு செய்து வரும் ஐரோப்பிய மத்திய வங்கி சோதனை அடிப்படையில் தற்போது அறிவித்துள்ளது. இந்நிலையில், இது முழுமையான மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu