போர்க்குற்றத்திற்காக ரஷிய ராணுவ மந்திரிக்கு சர்வதேச கோர்ட் பிடிவாரண்ட்

போர்க்குற்றத்திற்காக ரஷிய ராணுவ மந்திரிக்கு சர்வதேச கோர்ட் பிடிவாரண்ட்
X

ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி சோய்கு.

போர்க்குற்றத்திற்காக ரஷிய ராணுவ மந்திரிக்கு சர்வதேச கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது.

போர்க்குற்றத்திற்காக ரஷ்ய இராணுவ மந்திரிக்கு சர்வதேச கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது .இரண்டு ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இந்த போரில் இரு நாடுகளில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். வீரர்களை இழப்பை பொறுத்தவரை உக்ரைனை விட ரஷிய தரப்பில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த போரில் ரஷ்யா கடந்த 2022 அக்டோபர் மாதம் உக்ரைன் நாட்டி்ன் குடியிருப்பு பகுதியின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் இந்த செயல் மனிதத் தன்மையற்றது என பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனை அடுத்து ரஷ்யா மீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ரஷிய முன்னாள் ராணுவ மந்திரி செர்ஜி சோய்கு (வயது 69 )மற்றும் ராணுவ தளபதி வளரி ஜெராக்ஸ் ஆகியோருக்கு பிடிவாாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே ரஷிய அதிபர் புதின் மீதும் சர்வதேச கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
future ai robot technology