UAE ல் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை !
UAE - ல் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இருவர் அண்மையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.இந்நிலையில், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப் - ஐ ஆய்வுக்கு உட்படுத்தியதில் குறித்த இருவரும் தீவிரவாத போதனைகளை முன்னெடுத்திருந்தமை தெரியவந்துள்ளது.UAE ல் வசிக்கும் இலங்கை குடும்பங்களுக்கே இவர்களால் தீவிரவாதங்கள் குறித்த போதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல் துறை மக்கள் தொடர்பு அதிகாரி அஜித் ரோஹன தெரிவிக்கையில், "தீவிரவாதத்தைப் பிரசாரம் செய்ததற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் மாவனெல்ல மற்றும் கம்பொலவைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களையும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு கைதுசெய்திருந்தது.இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து லேப்டாப் ளையும் புலனாய்வுப் பிரிவு கைப்பற்றிய நிலையில், அந்த லேப்டாப் ளை வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளதுடன் நிபுணர்களின் அறிக்கை, பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் பெறப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே, லேப்டாப் களில் பல காணொளிகள் மற்றும் தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும் படங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu