கொழும்பு துறைமுகத்தில் ஐஎன்எஸ் கப்ரா: இலங்கை கடற்படை உற்சாக வரவேற்பு
கொழும்பு துறைமுகத்தில் ஐஎன்ஸ் கப்ராவுக்கு இலங்கை கடற்படை உற்சாக வரவேற்பு அளித்தது.
இந்தியக் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் கப்பலான ஐஎன்எஸ் கப்ரா நேற்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தைச் சென்றடைந்தது. இந்தக் கப்பலுக்கு இலங்கைக் கடற்படையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். துறைமுக வரவேற்பின் போது, ஐஎன்எஸ் கப்ராவின் கமாண்டிங் அதிகாரி, இலங்கையின் மேற்குக் கடற்படைத் துணைத் தளபதி ரியர் அட்மிரல் டி.எஸ்.கே பெரேராவைச் சந்தித்தார்.
அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில், இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படைக்குத் தேவையான அத்தியாவசிய உதிரி பாகங்கள் மற்றும் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. பிரதமரின் சாகர் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இரு கடற்படைகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் தோழமையை இந்தப் பயணம் மேலும் வலுப்படுத்தும்.
புதுடெல்லியில் ராணுவத் தலைமைத் தளபதியைக் கவர்ந்த தேசிய மாணவர் படையினர்
புதுதில்லியில் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, இன்று (09.01.2024) தேசிய மாணவர் படையின் முகாமில் குடியரசு தின முகாம் 2024-ஐப் பார்வையிட்டார். அவரை தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் வரவேற்றார்.
தேசிய மாணவர் படையின் (என்.சி.சி) ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் அணிவகுப்பை ராணுவத் தளபதி பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து சிந்தியா பள்ளியின் என்.சி.சி. மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், அந்தந்த மாநில கருப்பொருள்கள் குறித்து ராணுவத் தளபதிக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
தேசிய மாணவர் படையினரால் நிகழ்த்தப்பட்ட கண்கவர் 'கலாச்சார நிகழ்ச்சியை' ராணுவத் தளபதி மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
முன்னாள் தேசிய மாணவர் படையினர், தற்போது ஆயுதப்படைகளில் உயர் பதவிகளை வகிப்பது குறித்து ராணுவத் தளபதி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆயுதப் படைகளைத் தாண்டி பல்வேறு துறைகளிலும் தேசிய மாணவர் படையினர் தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் வகையில் திறன் படைத்தவர்கள் என்று அவர் கூறினார்.
தேசிய மாணவர் படை மாணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளிலும் தேசத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். ரத்ததான முகாம்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக சேவை நடவடிக்கைகள் போன்றவற்றில் தேசிய மாணவர் படையினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே பாராட்டு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu