இந்திய-ரஷ்ய கூட்டுறவு சிறப்பாக,மதிப்புமிக்க வகையில் மேலும் ஆழமாகும் -ரஷ்யா உறுதி
ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு குழு செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு குழு செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவு அமைச்சரை முன்னதாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது பலனளிக்கும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றதாக இந்திய பிரதமரிடம் ரஷ்ய செயலாளர் பட்ருஷேவ் கூறினார். மேலும் இந்தியாவுடனான 'சிறப்பான மற்றும் மதிப்புமிக்க கூட்டை' மேலும் ஆழப்படுத்துவதற்கான ரஷ்யாவின் உறுதியை வெளிப்படுத்தினார்.
பிராந்தியத்தில் முக்கிய மாற்றங்கள் நடைபெற்று வரும் வேளையில் ரஷ்யா செயலாளர் பட்ருஷேவ் தலைமையிலான குழுவின் வருகைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்திய-ரஷ்ய கூட்டின் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அதிபர் புடினுக்கு தமது நன்றியை தெரிவிக்குமாறு ரஷ்ய செயலாளர் பட்ருஷேவிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வரவுள்ள அதிபர் புடினின் வருகையை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu