உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா பரிந்துரை
பைல் படம்.
உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா அமெரிக்காவில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். உலக வங்கி தலைவராக இருந்த டேவிட் மால்பாஸின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. ஆனால் முன்னதாகவே பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் மால்பாஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து உலக வங்கியின் புதிய தலைவராக மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ அஜய் பங்காவை அமெரிக்க அதிபர் பைடன் பரிந்துரைத்துள்ளார்.
30 ஆண்டுகள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் அஜய் பங்கா. பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதன் அடிப்படையில் உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா பரிந்துரைத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம் உட்பட உலகில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகளையும் உலக வங்கி தரப்பில் இருந்து அஜய் பங்கா திறம்பட எதிர்கொள்வார் என்று அமெரிக்கா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சூழ்நிலைகளில் திறம்படச் செயல்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தொழில் திட்டம் போன்ற பிரிவுகளில் ஆலோசனை குழுவிலும் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu