‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ சாம்பியனாக இந்திய-அமெரிக்க எட்டாம் வகுப்பு மாணவர்

‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ சாம்பியனாக இந்திய-அமெரிக்க எட்டாம் வகுப்பு மாணவர்
X

தேவ் ஷா. 

2023 Scripps National Spelling Bee - இந்திய-அமெரிக்க எட்டாம் வகுப்பு மாணவர் தேவ் ஷா, ‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

2023 Scripps National Spelling Bee - அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 14 வயதான இந்திய-அமெரிக்க எட்டாம் வகுப்பு மாணவர் தேவ் ஷா. இவர், "psammophile" என்ற வார்த்தையை சரியாக உச்சரித்து 2023 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ விருதை வென்றுள்ளார்.

Dev Shah,Indian-American,Live Breaking News Headlines

நேற்று நடைபெற்ற 95வது ‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் மாணவர் தேவ் ஷா 50,000 அமெரிக்க டாலர் மதிப்பு பரிசை வெல்வதற்கான வார்த்தையை சரியாக உச்சரித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற , ‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் உலகம் முழுவதும் 11 மில்லியன் மக்கள் எழுத்துப் போட்டியில் கலந்து கொண்டனர்.

Psammophile,Scripps National Spelling Bee,Scripps National Spelling Bee 2023

தேசிய ஸ்பெல்லிங் பீ 1925ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா தொற்றுநோய் காரணமாக, 2020 இல் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்தப் போட்டியில் 11 மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர். தொடக்கச் சுற்றுப் போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது, காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

Scripps National Spelling Bee 2023 Winner,Scripps National Spelling Bee Winner

இந்த நிலையில், இந்திய-அமெரிக்க எட்டாம் வகுப்பு மாணவர் தேவ் ஷா, ‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். வர்ஜீனியாவின் ஆர்லிங்டனைச் சேர்ந்த 14 வயது சிறுமி சார்லட் வால்ஷ் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

இது தேவ் ஷாவின் மூன்றாவது முயற்சியாகும். கடந்த 2019 மற்றும் 2021ல் போட்டியில் அவர் கலந்துகொண்டார். தேவ் ஷாவின் பெற்றோர் மேடையில் ஏறியபோது உணர்ச்சிவசத்துடன் காணப்பட்டனர். மேலும் தேவ் ஷா நான்கு ஆண்டுகளாக இதற்காகத் தயாராகி வருவதாக அவரது தாயார் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!