உக்ரைனிலிருந்து தங்கள் நாட்டுமக்களை மீட்டு வருவதில் இந்தியா முதலிடம்
இந்தியர்களை மீட்டதில் "இந்தியா ஆபரேஷன் கங்கா" திட்டம் பாராட்டத்தக்கது. உக்ரைனிலிருந்து தங்களின் குடிமக்களை மீட்டுவரும் பணியில் இந்தியாவும் மற்ற சில நாடுகளையும் ஒப்பீடு செய்து பார்த்தால் இந்தியாவின் செயல்பாடுகள் சிறப்பனதாக உள்ளது.
உக்ரைனில் சீனாவைச் சேர்ந்த 6,000 பேர் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டின் குடிமக்களை வெளியேற்றும் திட்டங்களை ஒத்திவைத்துள்ளது. அதேசமயம் இந்தியா ஆபரேஷன் கங்கா திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி, இந்தியர்களை மீட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள சீனக் குடிமக்களுக்கு அந்நாடு பயண அறிவுரைகளை வெளியிடாமல் ஆதரவு நடைமுறைகளை மேற்கொள்ளாத நிலையில் இந்தியா தொடர்பு எண்கள், பயண அறிவுரைகள், ஆதரவு நடைமுறைகளை இந்திய குடிமக்களுக்கு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 900 ஊழியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை அமெரிக்காவால் வெளியேற்ற இயலவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரே மாதிரியான பயண அறிவுரைகளை வெளியிட்டுள்ளன. உதவிக்கான தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளன. ஜெர்மனியும் தனது குடிமக்களை வெளியேற்றி கொண்டுவரும் நிலையில் இல்லை.
உக்ரைனுக்கான பிரிட்டன், ஜெர்மனி தூதரகங்கள் கீவ் நகரிலிருந்து மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்தியத் தூதரகம் அங்கேயே செயல்படுகிறது.
உக்ரைனின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகத் தரவுகள் படி 80,000 சர்வதேச மாணவர்கள் அங்கு பயின்று வருகின்றனர். இவர்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து தனது குடிமக்களை வெளியேற்றிக் கொண்டுவருவதற்கான ஆபரேஷன் கங்கா திட்டத்தை மிகத்தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu