ரூ. 5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்: அப்படி என்ன ஸ்பெஷல் ?
பைல் படம்.
ஐஸ்கிரீம் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவுப் பொருள். வெண்ணிலா, சாக்லேட், ஸ்டிராபெர்ரி, பட்டர்ஸ்காட்ச், பிஸ்தா, மேங்கோ, என நீண்டு செல்லும். இதன் ஃபிளேவர்களுக்கு கட்டுப்படாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, ஐஸ்கிரீம்களின் ருசி மக்களை ஆட்கொண்டுள்ளது.
இந்நிலையில் பிரபல ஜப்பான் ஐஸ்கிரீம் நிறுவனமான ’செல்லட்டோ’, உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் விளைவாக, உலகின் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீமை ’செல்லட்டோ’ நிறுவனம் உருவாக்கி அசத்தியுள்ளது.
இத்தாலியின் ஆல்பாவில் விளைந்த வெள்ளை ட்ரஃபிள் ( இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.11.96 லட்சம்), பார்மிஜியானோ ரெஜியானோ என்னும் அரிய வகை சீஸ் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ள இந்த ஐஸ்கிரீமின் விலை இந்திய மதிப்பில் ரூ.5.20 லட்சம் ஆகும். இதன்மூலம் ’செல்லட்டோ’ நிறுவனத்தின் இந்த ஐஸ்கிரீம், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
ஒன்றரை ஆண்டு உழைப்புக்கு பின் இந்த ஐஸ்கிரீம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறும் ’செல்லட்டோ’ நிறுவனம், இதன் மணமும் சுவையும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu