பாகிஸ்தானில் மீண்டும் குண்டு வெடிப்பு: பலர் படுகாயம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் காவல்தலைமையகம் அருகே நடந்துள்ளது.
குவெட்டா காவல்துறை தலைமையகம் மற்றும் குவெட்டா கன்டோன்மென்ட் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பான பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும் வெளியாகிவில்லை. தகவலறிந்த காவல்துறை மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் குவெட்டாவில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். காவலர் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியில் ஒரு பகுதியில் மசூதியில் குண்டு வெடிப்பு நடந்தது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu