டேங்கர் கப்பல் மீது ஹவுத்தி ஏவுகணை தாக்குதல்: 22 இந்தியர்களை மீட்ட கடற்படை

டேங்கர் கப்பல் மீது ஹவுத்தி ஏவுகணை தாக்குதல்: 22 இந்தியர்களை மீட்ட கடற்படை
X

ஏவுகணையால் தாக்கப்பட்ட சரக்கு கப்பல். 

ஏடன் வளைகுடாவில் ஹவுத்தி ஏவுகணை தாக்குதல் நடைபெற்ற டேங்கர் கப்பலில் இருந்து 22 இந்தியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது.

ஏடன் வளைகுடாவில் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் வெள்ளிக்கிழமை இரவு ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையால் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் ஒன்றுக்கு இந்திய கடற்படை போர்க்கப்பல் மீண்டும் உதவிக்கு சென்றது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி பயங்கரவாதிகள், ஏமனின் ஹவுத்தி கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை ஏவி, வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு எம்.வி.மார்லின் லுவாண்டா என்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது.

இதனையடுத்து அமெரிக்க போர்க்கப்பல் USS Carney மற்றும் பிற கப்பல்களும் எம்.வி.மார்லின் லுவாண்டாவில் உள்ள ஊழியர்களை மீட்க அங்கு சென்றன. இந்த கப்பல் யேமனில் ஏடனுக்கு தென்கிழக்கே 60 கடல் மைல் தொலைவில் இருந்தது.

கடந்த சில மாதங்களாக செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் வழியாக செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சோமாலிய கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான முக்கியமான கடல் வர்த்தகம் பெரும் இடையூறுகளை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் ஏடன் வளைகுடாவில் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் வெள்ளிக்கிழமை இரவு ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையால் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் ஒன்றுக்கு இந்திய கடற்படை போர்க்கப்பல் மீண்டும் உதவிக்கு சென்றது.

என்.பி.சி.டி (அணு, உயிரியல் மற்றும் வேதியியல் சேதக் கட்டுப்பாடு) குழு, வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐ.என்.எஸ் விசாகப்பட்டினத்திலிருந்து தீயணைப்பு உபகரணங்களுடன் மார்ஷல் தீவு கொடியிடப்பட்ட மார்லின் லுவாண்டாவில் டேங்கரில் இருந்த 22 இந்தியர் மற்றும் பங்களாதேஷ் நாட்டை ச் சேர்ந்த ஒருவரையும் மீட்டது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏடன் வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம், ஆபத்தில் உள்ள சரக்குக் கப்பல் கேட்டுக்கொண்டதை அடுத்து உதவி செய்யப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதிலும், கடலில் உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்திய கடற்படை உறுதியாகவும் உறுதிபூண்டும் உள்ளது" என்று கூறினார்.

Tags

Next Story