விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், அவரது 2 மகள்கள் உயிரிழப்பு

விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், அவரது 2 மகள்கள் உயிரிழப்பு
X

 ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர்

ஜெர்மன் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் மற்றும் அவரது இரண்டு மகள்கள் கரீபியன் தீவுகளில் விமான விபத்தில் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் (வயது 51). ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கிறிஸ்டின் ஆலிவரின் மனைவி ஜெசிகா. இந்த தம்பதிக்கு அகிக் (வயது 10), மடிடா லிப்சர் (வயது 12) என இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கிறிஸ்டின் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த வகையில் நேற்று மதியம் கிறிஸ்டின் தனது 2 மகள்களுடன் சிறிய ரக தனி விமானம் மூலம் பிக்யுயா தீவில் இருந்து ஜெயிண்ட் லுசியா நோக்கி புறப்பட்டார்.

புறப்பட சில நிமிடங்களில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் கிறிஸ்டின், மகள்கள் அகிக், மடிடா லிப்சர், விமானி ராபர்ட் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மீனவர்கள், நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் கடலோரக் காவல்படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கு 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

குடும்பம் விடுமுறையில் இருப்பதாகத் தோன்றியது, ஆலிவர் இன்ஸ்டாகிராமில் சில நாட்களுக்கு முன்பு வெப்பமண்டல கடற்கரையின் படத்தையும் தலைப்புடன் வெளியிட்டார்: "எங்காவது சொர்க்கத்தில் இருந்து வாழ்த்துக்கள்! சமூகத்திற்கும் அன்பிற்கும்... 2024 [இங்கே] நாங்கள் வருகிறோம்!" என பதிவிட்டுள்ளார்

கிறிஸ்டியன் க்ளெப்ஸரில் பிறந்த ஆலிவர், டாம் குரூஸ் திரைப்படமான "வால்கெய்ரி"யில் ஒரு சிறிய பகுதி உட்பட, 60க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

"சேவ்ட் பை தி பெல்: தி நியூ கிளாஸ்" என்ற தொலைக்காட்சி தொடர் மற்றும் "தி பேபி-சிட்டர்ஸ் கிளப்" திரைப்படம் ஆகியவை தொழில் வாழ்க்கையின் ஆரம்பகால பாத்திரங்களில் அடங்கும்.

ஆலிவர் தனது சொந்த ஜெர்மனியில் பிரபலமான போலீஸ் நிகழ்ச்சியான "அலாரம் ஃபர் கோப்ரா 11" இல் இரண்டு சீசன்களில் நடித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!