உடலமைப்பில் ஆண் பாதி, பெண் பாதி: இது ஒரு அதிசய பறவை

உடலமைப்பில் ஆண் பாதி, பெண் பாதி: இது ஒரு அதிசய பறவை

ஆண்பாதி, பெண் பாதி உடலமைப்பு கொண்ட அதிசய பறவை.

உடலமைப்பில் ஆண் பாதி, பெண் பாதி உருவம் கொண்ட அதிசய பறவை தென் அமெரிக்க நாட்டின் கொலம்பியாவில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

நாம் இதுவரை கண்டிராத மிக மிக அரிதான ஒரு வகை பறவையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பலருக்கும் மிகப் பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகம் பல்வேறு அதிசயங்களைக் கொண்டு இருக்கிறது.. அந்தளவுக்கு இந்த பூமி நம்மைத் தொடர்ந்து வியக்க வைத்துக் கொண்டே இருக்கும். அதுதான் இயற்கையாகச் சிறப்பாக இருக்கிறது.

இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நாம் வியந்து பார்க்கும் வகையில் இந்த அதிசயங்கள் இருக்கும். இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்லாம். அப்படியொரு அதிசயத்தைத் தான் ஒருவர் போட்டோவாக எடுத்துள்ளார். அரிதிலும் அரிய நிகழ்வாக ஒருபாதி ஆண் மறுபாதி பெண் என இருக்கும் பறவை குறித்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்த குறிப்பிட்ட இன பறவையில் இதுபோன்ற அரிதான சம்பவம் கடந்த 100 ஆண்டுகளில் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை தான் நடந்துள்ளது. இந்த அரியவகை பறவையில் அதன் உடலின் ஒரு பாதி ஆண் நிறத்தையும், மறு பாதியில் பெண் இறகுகளையும் கொண்டுள்ளது. இருதரப்பு ஜினாண்ட்ரோமார்பிசம் என்று அழைக்கப்படும் இந்த பண்பை வெளிப்படுத்தும் மிக மிக அரிய பறவைகளில் இதுவும் ஒன்றாகும்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மனிசலேஸ் அருகே உள்ள ஒரு சிறிய பண்ணையில் தான் இந்த பறவையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பச்சை நிற தேன் கொடி பறவை அதாவது ஆங்கிலத்தில் இதை ஹனிக்ரிப்பர் பறவை என்பார்கள். ஜான் முரில்லோ என்பவர் தான் இந்த பறவையை முதலில் கண்டுபிடித்துள்ளனர். இந்த பறவையின் போட்டோவை பார்த்தால் உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகவே புரியும். அதாவது இந்த பறவையில் ஒரு பாதியில் அக்வா-நீல இறகுகளும் மறுபுறம் மஞ்சள்-பச்சை நிற இறகுகளும் உள்ள நிலையில், இரண்டிற்கும் நடுவே தெளிவான கோடும் இருக்கிறது. பொதுவாக இந்த தேன் கொடி பறவையில் ஆண் பறவைகள் கறுப்புத் தலையுடன் கூடிய பிரகாசமான நீல நிற இறகுகளைக் கொண்டிருக்கும். பெண் பெண் பறவைகள் பச்சை நிறத்தில் இருக்கும்.

ஆனால், இந்த பறவை இரண்டும் சேர்ந்து கலவையான நிறத்தில் இருக்கிறது. இது குறித்து ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உங்களால் அவ்வளவு சீக்கிரம் எந்த பறவை இனத்திலும் இருதரப்பு ஜினாண்ட்ரோமார்ப் பார்க்க முடியாது. பறவைகளில் இந்த நிகழ்வு மிகவும் அரிதானது. இதற்கு முன்பு எங்கும் இதுபோல ஒன்றை யாரும் பார்த்தாக தெரியவில்லை. இது பிமர்பிக்க வைக்கிறது என்றார்.

இந்த பறவையின் உள் உறுப்புகளும் சரிபாதியாக ஆண் மற்றும் பெண் எனப் பிரிந்து இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், ''இதை இருதரப்பு ஜினாண்ட்ரோமார்பி என்பார்கள். இதில் ஒருபுறம் ஆண்.. மறுபுறம் பெண் இருக்கும். இந்த நிகழ்வு பெண் செல் பிரிவின் போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதில் ஏற்படும் பிழையிலிருந்து எழுகிறது, அதைத் தொடர்ந்து இரண்டு விந்தணுக்களால் இரட்டைக் கருத்தரித்தல் ஏற்படுகிறது" என்றார். ஆய்வாளர்கள் இந்த பறவையைப் பல மாதங்கள் சோதனை செய்துள்ளனர். அதில் தான் அவர்களுக்கு இந்த பறவை வெளிப்புறம் மட்டுமின்றி உள்ளேயும் சரியாக 50 சதவீதம் ஆணாகவும் 50சதவீதம் பெண்ணாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.

Tags

Next Story