ட்விட்டர், மெட்டா, அமேசான்: அதே வழியில் கூகுள் நிறுவனமும்
பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், பெரிய நிறுவனங்கள் தங்கள் வருவாயை வலுப்படுத்துவதற்காக ஆட்குறைப்பு மற்றும் பணியமர்த்தல் செயல்முறையை குறைப்பது போன்ற வழியை கையாளுகின்றன. உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் ஒரு புதிய செயல்திறன் மேலாண்மை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஆயிரக்கணக்கான குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களை வெளியேற்றக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தி இன்ஃபர்மேஷன் அறிக்கையின்படி , அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படுத்தப்படும் புதிய செயல்திறன் மேலாண்மை அமைப்பு, குறைவான செயல்திறன் கொண்ட கூகுள் ஊழியர்களை வெளியேற்ற மனித வள மேலாளர்களுக்கு வழி செய்யலாம் .
பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் பங்குகளை செலுத்துவதை தவிர்க்க கூகுளின் மேலாளர்கள் செயல்திறன் மதிப்பீடுகளைப் பயன்படுத்தலாம் என்றும் தொழில்நுட்ப வெளியீடு கூறியது.
"புதிய அமைப்பின் கீழ், மேலாளர்கள் 6 சதவீத ஊழியர்களை அல்லது சுமார் 10,000 பேரை வணிகத்தில் அவர்களின் தாக்கத்தின் அடிப்படையில் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள் என வகைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்"
ட்விட்டர் தலைவர் எலோன் மஸ்க் மைக்ரோ-பிளாக்கிங் தளத்தை கையகப்படுத்திய பிறகு, ட்விட்டரின் 7,500 பேர் கொண்ட உலகளாவிய பணியாளர்களில் பாதியை குறைக்கத் திட்டமிட்டார்.
மேலும், அமேசான் நிறுவனமும் கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் கடந்த வாரம் தெரிவித்தது. நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கை என்று அறிக்கை கூறியுள்ளது.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, சுமார் 11,000 ஊழியர்களை அல்லது அதன் உலகளாவிய பணியாளர்களில் 13 சதவீதத்தை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதில் இருந்து பெருநிறுவனங்கள் பல இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவில் சரிந்து வருகிறது. இதைச் சமாளிக்கவே ட்விட்டர், அமேசான், நெட்பிளிக்ஸ், மைக்ரோசாஃப்ட், மெட்டா, போன்ற டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு செய்து வருகின்றன. மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் கூகுளின் தற்போதைய நிலைமை மோசமாக பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu