ஜெர்மனியும் அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசிக்கு தடை விதித்தது
முன்னதாக 55 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியை வழங்குவதை கனடா இடைநிறுத்தியது.எனினும் தமது தடுப்பூசியில் ஆபத்தை விடவும் மிக அதிக நன்மை இருப்பதை சர்வதேச மருந்து சீராக்க அமைப்புகள் கண்டுபிடித்திருப்பதாக அஸ்ட்ராசெனக்கா தெரிவித்துள்ளது.
60 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி வழங்குவதை ஜெர்மனி இடைநிறுத்தியுள்ளது.ஜெர்மனியில் கொரோனா தடுப்பு தடுப்பூசி வழங்கப்பட்ட சுமார் 2.7 மில்லியன் பேரில் 31 இரத்த உறைவுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அந்நாட்டு மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் இது பற்றி தொடர்ந்து ஆய்வு நடத்தி வருவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டது. அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி ஐரோப்பாவில் பரவலாக பயன்படுத்தப்படுவதோடு நன்மை அடைந்து வரும் அடைந்துவரும் நாடுகளுக்கு அந்த மருந்து இலாப நோக்கின்றி விநியோகிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu