ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம்

ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம்
X
நண்பன் இருந்தால் வாழ்வில் துன்பம் தெரியாது-நாமாகவே தேடிக்கொண்ட உறவுகளான நண்பர்களுக்கென்று தனி தினத்தை சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம்.

நண்பன் இருந்தால் வாழ்வில் துன்பம் தெரியாது... நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!

உலகம் முழுவதும், ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்னை, தந்தை, சகோதரர்கள் என நம் உறவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான தினங்களை கொண்டாடுவோம். அதே போன்று நாமாகவே தேடிக்கொண்ட உறவுகளான நண்பர்களுக்கென்று தனி தினத்தையும் சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம். நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைத்து வெற்றி தோல்விகளிலும், மகிழ்ச்சி துக்கம் என அனைத்து தருணங்களிலும் நம்முடன் இருந்து வாழ்வை அழகாக்குபவர்கள் நண்பர்கள். அவர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடுவது தான் நண்பர்கள் தினம்.

'உன்னை பற்றி சொல்" 'உன் நண்பனை பற்றி சொல்கிறேன்" என்பது வழக்கு மொழியாக இருந்தாலும், அது எந்த காலத்திற்கும் பொருந்தும். ரத்த சொந்தங்களை தவிர, நம்முடனே பயணித்து, நமக்காகவே வாழ்ந்து எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காத ஜீவன்கள் என்றால் அது நண்பர்கள் மட்டுமே.உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. எனவே எல்லோருமே கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம்.

முந்தைய காலகட்டத்தில் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு தினங்கள் நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. . பின்னர், முதன்முறையாக 1958 ம் ஆண்டு ஜூலை 30 ம் தேதியை உலக நண்பர்கள் தினமாக கொண்டாடலாம் என நண்பர்களுக்கான அமைப்பு கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் 2011 ம் ஆண்டு ஏப்ரல் 27 ம் தேதியை சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடலாம் என ஐநா சபை அறிவித்தது.

அமெரிக்க காங்கிரஸ் 1935 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை நட்பு தினமாக பிரகடனப்படுத்தியது. இதுவே தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கி விட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையை சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடுகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!