சிலியில் வரலாறு காணாத காட்டுத்தீ: 46 பேர் உயிரிழப்பு

சிலியில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீ அதிக மக்கள் திரள் உள்ள பகுதிகளில் பரவி வருகிறது. இதில் குறைந்தது 46 பேர் இதில் பலியானதாகவும் 1,100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையானதாகவும் சிலி பிரதமர் தெரிவித்துள்ளார். 1.
அமெரிக்கா நாடான சிலியின் பிரதமர் கேப்ரியல் போரிக் பேசும்போது, வல்பரைஸோ மாகாணத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் சவாலை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
92 இடங்களில் தீ அணையாமல் உள்ளது, ஏறத்தாழ 43 ஆயிரம் ஹெக்டர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாதகமான வானிலை இருப்பதால் தீ பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணி தொடர்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா தெரிவித்துள்ளார்.
19 ஹெலிகாப்டர்கள், 450 மீட்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ என அழைக்கப்படுகிற வானிலை மாற்றத்தின் காரணமாக கடும் வறட்சியும் அதனால் எப்போதையும் விட கூடுதல் வெப்பநிலையும் காட்டுத்தீக்கு காரணமாக உள்ளது. ஜனவரியில் கொலம்பியாவில் 17 ஆயிரம் ஹெக்டர் காடு தீக்கிரையானது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu