விடாது கருப்பு: ஆப்கன் டு உக்ரைன் தஞ்சம், இப்போ போலந்தில் தஞ்சம்
போலந்து எல்லையில் தனது குழந்தைகளுடன் ரஹானி
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் அஜ்மல் ரஹ்மானி (40). நேட்டோ சார்பில் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்தார். ஆப்கானில் இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
ஆப்கானிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரஹ்மானிக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. இதனால் ஆப்கனிலிருந்த வீடு, கார் என எல்லாவற்றையும் விற்று அங்கிருந்து குடும்பத்தை அழைத்துக் கொண்டு உக்ரைன் நாட்டின் ஒடேசா எனும் துறைமுக நகரில் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்தார். தனக்கென வேலை தேடிக் கொண்டு புது வாழ்க்கை தொடங்கினார்.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா சில தினங்களுக்கு முன் போர் தொடுத்தது. ஆப்கானிஸ்தானில் வசித்த அனுபவம் இருந்ததால், நிலைமையை உணர்ந்து குடும்பத்துடன் 1,100 கிலோமீட்டர் பயணம் செய்து போலந்து எல்லையை அடைந்துள்ளார்.
போலந்து நாட்டில் தஞ்சம் புகுந்த ரஹ்மானி கூறுகையில், ஒரு போரிலிருந்து தப்பித்து இங்கு வந்தேன். இங்கேயும் போர் ஆரம்பித்துவிட்டது. என்னை துரதிர்ஷ்டம் துரத்துகிறது. மனைவி, மகள், மகனுடன் 30 கிலோமீட்டர் நடந்து இங்கு வந்துள்ளோம். என்னைப் போல் பலர் இங்கு வந்துள்ளனர். எங்கள் எதிர்காலம் என்னாகுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன். இருந்தாலும் என் குடும்பம் என்னுடன் இருப்பதால், அதைவிட வேறு பெரிதில்லை என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu