வெள்ளை மாளிகையில் அரைக்கம்பத்தில் கொடிகள்
அமெரிக்காவில் கேபிடால் கட்டிடத்தின் வெளியே மர்ம நபர் ஒருவர் காரை கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது மோதியதில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.
பின் காரில் இருந்து வெளியே குதித்த ஓட்டுனர் அதிகாரிகளை கத்தியால் குத்தியதில் அதிகாரி ஒருவர் பலியானார்.இந்த சம்பவத்தில் அமெரிக்க கேபிடால் கட்டிட பாதுகாப்பு அதிகாரியான வில்லியம் பில்லி இவான்ஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதுபற்றி அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
அமெரிக்காவின் கேபிடால் பகுதியில் பாதுகாப்பு சோதனை சாவடியில் நடந்த வன்முறை தாக்குதலில் காவல் அதிகாரி வில்லியம் இவான்ஸ் கொல்லப்பட்டும், சக அதிகாரி உயிருக்குப் போராடி வருகிறார் என்பது பற்றியும் அறிந்து ஜில் மற்றும் நான் மனமுடைந்து போனோம். வெள்ளை மாளிகை கொடிக் கம்பங்கள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதிகாரி ஈவான்ஸ் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை அனுப்புகிறோம், மேலும் அவரது இழப்பின் காரணமாக அனைவரும் துயருர்ந்தனர்.கேபிடல், அங்கு வேலை செய்யும் அனைவருக்கும், அதைப் பாதுகாப்பவர்கள் என இது எவ்வளவு கடினமான நேரம் என்பதை நாங்கள் அறிவோம், என ஜனாதிபதி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu