உக்ரைனில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

உக்ரைனில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்
X

உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் 

உக்ரைன் குடியிருப்பு பகுதி மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

உக்ரைன் ரஷியா இடையேயான போர் ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்து வருகிறது. அவ்வபோது, ரஷிய உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைன் நகரமான போக்ரோவ்ஸ்க் மீது இரண்டு ரஷிய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்தது.

இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதேபோல் நடந்த இரண்டாவது தாக்குதலில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் உயர்மட்ட அவசர அதிகாரி கொல்லப்பட்டார். மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 19 காவல் அதிகாரிகள், ஐந்து மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 40 நாடுகளின் அதிகாரிகள் சவுதி அரேபியாவில் ஒன்று கூடி உக்ரைனில் நடந்த போருக்கு அமைதி தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு நாள் கழித்து இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

ரஷ்ய தாக்குதல்கள் "சாதாரண குடியிருப்பு கட்டிடத்தை" தாக்கியதாக ஜெலன்ச்கி கூறினார், ஐந்து மாடி கட்டிடத்தின் மேல் தளம் அழிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டார்.

குழப்பத்தின் காட்சிகளுக்கு மத்தியில், பொதுமக்கள் இடிபாடுகளை அகற்றுவதையும், மீட்பவர்கள் மக்களை ஆம்புலன்ஸ்களில் அழைத்துச் செல்வதையும் காட்டியது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself