டிரம்ப் பங்களாவில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பங்களாவில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் போது ஜனாதிபதி மார்-ஏ-லாகோவிற்கு எடுத்துச் சென்ற ஆவணங்கள் தொடர்பான தேடுதல் வேட்டை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் இது குறித்து முன்னாள் அதிபர் டிரம்ப் கூறுகையில், புளோரிடாவில் பாம் பீச்சில் உள்ள எனது அழகான இல்லமான மார்-ஏ-லாகோ தற்போது எப்.பி.ஐ. அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டு சோதனையிடப்படுகிறது. எனது வீட்டில் அறிவிக்கப்படாத சோதனை அவசியமில்லை, பொருத்தமானதும் இல்லை. இத்தகைய தாக்குதல் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே நடக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கா இப்போது அந்த நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது,
இது நமது தேசத்திற்கு இருண்ட காலமாகும், ஆயுதத்தை கொண்டு அமெரிக்க நீதி துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் 2024 ஆம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பாத சில தீவிர இடது ஜனநாயக கட்சியினரின் மறைமுக தாக்குதல் என குற்றம்சாட்டி உள்ளார்.
மார்-ஏ-லாகோவிலிருந்து 15 பெட்டிகளை மீட்டெடுத்ததாக தேசிய ஆவணக் காப்பகம் கூறியது, அவற்றில் சில ரகசிய பதிவுகள் உள்ளன. அமெரிக்க அதிபர்கள் தங்கள் கடிதங்கள், பணி ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அனைத்தையும் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு மாற்றுவது சட்டப்படி கட்டாயமாகும்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி சட்டவிரோதமாக பல ஆவணங்களை கிழித்தெறிந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu