சீனா தயாரித்துள்ள விமானத்தை விட வேகமாக இயங்கும் மின் காந்த ரயில்

சீனா தயாரித்துள்ள விமானத்தை விட வேகமாக இயங்கும் மின் காந்த ரயில்

சீனா தயாரித்துள்ள மின்காந்த ரயில்.

விமானத்தை விட வேகமாக இயங்கும் மின் காந்த ரயிலை சீனா தயாரித்து உள்ளது.

மணிக்கு 623 கி.மீட்டருக்கு மேல் செல்லும் திறன் கொண்ட ரயிலின் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதன் மூலம் விமானத்தை விட அதிவேகத்தில் செல்லும் ரயிலை சீனா விரைவில் இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நாடு சீனா. மக்கள் தொகையிலும் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள சீனா, சர்வதேச அளவிலும் வல்லமை பொருந்திய நாடாக வலம் வர வேண்டும் என்ற பெரும் கனவுடன் உள்ளது. உலக பொருளாதார சந்தையிலும் அமெரிக்காவுடன் மல்லுகட்டி வருகிறது. பொருளாதார வல்லரசு மட்டுமின்றி, அனைத்து துறையிலும் நாம் தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு சீனா செயல்பட்டு வருகிறது.

வானிலை, சாட்டிலைட், விமானங்கள் என்று பல்வேறு துறைகளிலும் சீனா படுவேகமாக ஆய்வுகளை நடத்தி வருகிறது. விண்வெளியில் தங்களுக்கு எனத் தனியாக விண்வெளி ஆய்வு மையத்தையே கூட சீனா அமைத்து வருவது அனைவருக்கும் தெரிகிறது. அதேபோல், போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக அதி நவீன சாலைகள். அதிவேக ரயில்கள் என இதன் மீதும் சீனா தனி ஆவர்த்தனம் காட்டி வருகிறது. அந்த வகையில், சீனாவில் ஏற்கனவே அதிவேக ரயிலை அந்த நாடு தயாரித்துள்ளது. இந்த ரயிலானது மேக்னட்டிக் எனப்படும் எலக்ட்ரோ காந்தம் கொண்டு ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே உரசல் இன்றி பயணிக்கும் அதாவது காற்றில் பறப்பது போல டெக்னிக்கை கொண்டது இந்த ரயில். இந்த ரயிலுக்கு மேக்லேவ் என சீனா பெயரிட்டு இருந்தது.

புல்லெட் ரயிலை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில், தற்போது தனது சொந்த சாதனையை முறியடித்து இருப்பதாக சீனாவின் ஏரோஸ்பேஸ் சயின்ஸ் மற்றும் தொழில் கழகம் அறிவித்துள்ளது. இந்த ரயிலில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் என்னவென்றால், ரயில்களில் இரண்டு ஜோடி காந்தங்கள் பயன்படுத்தப்படும் ஒன்று ரயில் பெட்டியை தண்டவாளத்திற்கு மேல் உயர்த்தும், மற்றொரு காந்தம் அப்படி உயர்ந்து நிற்கும் காந்த சக்தி மூலம் இழுத்து செல்லப்படும் இந்த ரயில் இதற்கு முன்பாக மணிக்கு 623 கி.மீட்டர் வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையை தற்போது புதிய லேவிடேட்டு (மேக்லேவ்) முறியடித்து இருப்பதாகவும் குறைந்த காற்றழுத்தம் கொண்ட 2 கி.மீட்டர் தூர டியூப்பில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த புதிய ரெக்கார்டு வைத்துள்ளதாகவும் சீனா கூறியுள்ளது. எனினும், இந்த ரயில் எத்தனை கி.மீட்டர் வேகத்தை எட்டியது என்ற விவரம் வெளியாகவில்லை. விமானத்தை விட அதிவேகமாக செல்லும் ரயிலை விரைவில் சீனா இயக்கும் என்றே சொல்லப்படுகிறது.

Tags

Next Story