துருக்கி, நியூசிலாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவில் இன்று நில நடுக்கம்
துருக்கி, நியூசிலாந்தை தொடர்ந்து இன்று இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.4 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று (வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பாக துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.இந்த வரிசையில் இன்று இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று தான். கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசிவாயின் கடல் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக இந்தியா இலங்கை ஆகிய நாடுகளை ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி தாக்கியது.
சுனாமி தாக்கியதில் தமிழகத்தில் நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். சுனாமியால் ஏற்பட்ட இழப்பினை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மக்கள் சுனாமி நினைவு நாளை அனுசரித்து வருகிறார்கள். இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி வந்து விடுமோ என்ற அச்சமும் மக்களிடம் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu