அபுதாபியில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்: 2 இந்தியர்கள் பலி

அபுதாபியில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்:  2 இந்தியர்கள் பலி
X

ட்ரோன் தாக்குதலில் எண்ணெய் எரிபொருள் டேங்கர்கள் எரிந்து கடும் புகை வெளியேறியது. 

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், இரு இந்தியர்கள் உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில், திடீரென ட்ரோன் மூலம், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், ஏடிஎன்ஓசி எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 எரிபொருள் டேங்கர் வெடித்து சிதறின.

இந்த கொடூர தாக்குதலில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என, இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 6 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஈரான் ஆதரவு பெற்ற, ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதலை, உலக நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!