Trump arrest அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது? உண்மை என்ன?
trump arrest ai images டிரம்ப் கைதானதாக ஏஐ உருவாக்கிய படங்கள்
trump arrest ai images டிரம்ப் கைதானதாக ஏஐ உருவாக்கிய படங்கள்அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டதாக இணையத்தில் வைரலாகும் புகைப்படங்களால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அவை ஆர்டிபிசியல் இண்டலிஜென்ட் எனப்படும் ஏஐ டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் அதிபராக இருந்து உலக நாடுகள் பலவற்றை தனது அதிகாரத்தால் மிரட்டிய டொனால்ட் டிரம்ப், தற்போது கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் என்ன, எப்படி அவர் கைது செய்யப்படுவார் ஏன் அவரை கைது செய்கிறார்கள் என்பன குறித்த தகவல்களைக் காண்போம்.
பிரபல நடிகையுடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாக கூறி அமெரிக்க முன்னாள் அதிபர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு எதிரான அலை எழுந்தது. இந்நிலையில் அவரை கைது செய்யப்போகிறார்கள் என்கிற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட நடிகைகளை இவர் மீது பாலியல் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. இதனை ஆதாரமாக பொதுவெளியிலேயே அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். முதலில் இருவர் இவர் மீது புகார் தெரிவித்திருந்த நிலையில், அடுத்தடுத்து பலரும் இவர் மீது புகார் அளித்துக் கொண்டே இருந்தனர். இதில் சிலர் ஆபாச பட நடிகைகள் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2006ம் ஆண்டு டிரம்ப் தன்னுடன் தவறாக நடந்ததாக புகார் அளித்துள்ளார் ஜெசிகா டிரேக். என்னுடன் சேர்த்து மற்ற இரு பெண்களிடமும் அவர் தவறாக நடந்துகொண்டார் என்று புகார் அளித்துள்ளார் அவர்.
சமீபத்தில் இன்னொரு நடிகையும் இவர் மீது புகார் அளித்துள்ளார். டிரம்ப் மனைவி குழந்தை பிறப்புக்காக சென்றபோது தன்னை அழைத்து தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக ஸ்டோமி டேனியல்ஸ் எனும் நடிகை பகீர் கிளப்பினார். இதுவும் கடந்த 2006ம் ஆண்டு நடந்ததாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த விசயங்கள் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் வெளியாகி பெரிய பூதத்தையே கிளப்பியது போல் ஆகிவிட்டது. இதனாலேயே டிரம்ப் தேர்தலில் தோற்றார். எப்போதும் தன்னைப் பற்றி செய்தி வெளியாகிக் கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கும் நபர் டிரம்ப். இப்போது அவரே வாயைக் கொடுத்து மாட்டியது போல மீண்டும் இவர் மீதான புகார்களை ஊடகங்கள் பேசும் அளவுக்கு ஆகிவிட்டார்.
" குடியரசுக் கட்சியின் முக்கிய வேட்பாளர் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படுவார்கள். போராட்டத்திற்கு தயாராகுங்கள் மக்களே.." என்று ஒரு டிவீட்டை வெளியிட்டிருந்தார் டிரம்ப். மேலும் "ஊழல் மற்றும் செல்வாக்கு மிக்க மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இருந்து வந்த சட்டவிரோதமான கசிவுகள் இது" என்று டிரம்ப் அதில் குறிப்பிட்டிருந்தார். இதில் இவர் தன்னைத் தானே குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் மீடியாக்களில் இவரது பெயர் வலம் வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu