உலகளவில், முதல் பத்து இடங்களை பிடித்த மிகச்சிறந்த அருங்காட்சியகங்கள் எவை தெரியுமா?

படத்தில் காணப்படும் , பிரான்ஸ் ஈபிள் டவர் போல, உலக அதிசயங்காக வியக்க வைக்கும் நிலையில், அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. (கோப்பு படம்)
அருங்காட்சியகங்களில் பல வகைகள் உள்ளன. பல முக்கியமான நகரங்களில், நுண்கலைகள், பயன்படு கலைகள், கைப்பணி, தொல்லியல், மானிடவியல், இன ஒப்பாய்வியல், வரலாறு, பண்பாட்டு வரலாறு, படைத்துறை வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை வரலாறு, நாணயவியல், தாவரவியல், விலங்கியல், அஞ்சற்பொருள் சேகரிப்பு போன்ற துறைகளுக்காகத் தனித்தனியான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண முடியும். இந்த வகைகளுக்கு உள்ளேயே பல சிறப்புப் பிரிவுகளுக்கும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாக, நவீன ஓவியங்கள், உள்ளூர் வரலாறு, வானூர்திப் பயண வரலாறு, போன்றவற்றுக்கான அருங்காட்சியகங்களைக் குறிப்பிடலாம்.
உலகில் அருங்காட்சியகங்கள் இல்லாத நாடுகளே இல்லை. ஆனால், மிகவும் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்கள் என்றால், ஏறத்தாழ 50 மட்டுமே இருக்கும். அவற்றில் டாப்-10 அருங்காட்சியகங்களை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நேஷனல் ரயில்வே அருங்காட்சியகம்
இது இங்கிலாந்தில் யார்க் நகரில் உள்ளது. உலகின் மிகப்பெரிய ரெயில்வே அருங்காட்சியகம். 150 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ரெயில் என்ஜின்களைக் கூட இங்கே பார்க்கலாம்.
செகண்ட் நம் வால்ஸ் என்ட் அருங்காட்சியகம்
இதுவும் இங்கிலாந்தில் உள்ளது. இங்கே ரோமானியர் காலத்து குளியல் வீடுகள், கோட்டைகள் பிரசித்தம்.

பிகாசோ அருங்காட்சியகம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இது உள்ளது. உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிகாசோவின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை இங்கே பார்க்கலாம். பிகாசோவின் ஓவியங்கள் வேறு எங்கும் இவ்வளவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாஸ்டர் கெஸ்சிசிட் பான் அருங்காட்சியகம்
இது ஜெர்மனியில் உள்ளது. ஒவ்வொரு வரலாற்றுப் போருக்கும் பிந்தைய ஜெர்மனியை விவரிக்கும் அருங்காட்சியகம் இது. நாடுகளுக்கு இடையே பனிப்போர் உருவாகக் காரணமான சம்பவ தொகுப்புகளும் இங்கு உண்டு.
லூசியானா அருங்காட்சியகம்
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் நவீன மற்றும் தற்காலத்து ஓவியங்கள் நிறைய உள்ளன.
வாசா அருங்காட்சியகம்
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. 1628-ம் ஆண்டு மூழ்கிய சுவீடன் நாட்டு போர்க் கப்பலை 1961-ம் ஆண்டு கண்டெடுத்தனர். அந்த பழமையான கப்பல் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
நேச்சர் ஹிஸ்டாரிஸ் அருங்காட்சியகம்
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இது உள்ளது. முழுக்க முழுக்கக் கண்ணாடியால் கட்டி அலங்கரிக்கப்பட்ட அருங்காட்சியகம். வரலாறு மற்றும் புவி தொடர்பான தொல்பொருள் துறை கண்டுபிடிப்புகள் இங்கே நிறைய உள்ளன.
பீட்டர் அண்ட் பால் போர்ட்ரஸ் அருங்காட்சியகம்
இது ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ளது. இந்நகர் வரலாற்றை சொல்லும் இந்த அருங்காட்சியகம், மிகவும் பழமையானது.
மியூஸியம் ஆப் பைன் ஆர்ட்
இது அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அமைந்துள்ளது. 19-ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் கலை மற்றும் கலாசார நினைவுச் சின்னங்களைக் கொண்டிருக்கிறது.
பிலடெல்பியா மியூஸியம் ஆப் ஆர்ட்
இதுவும் அமெரிக்காவில் உள்ள மியூஸியமே. இங்கு ஓவியங்கள், சிற்பங்கள், புராதனப் பொருட்கள் ஏராளமாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகங்கள், அறிவியல், கலை, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காகக் காட்சிப்படுத்துகின்றன. இக் கண்காட்சிகள், நிலையானவையாகவோ அல்லது தறகாலிகமானவையாகவோ இருக்கலாம். பெரிய அருங்காட்சியகங்கள், உலகின் பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றன. அவற்றில் பத்து அருங்காட்சியகங்கள் குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu