உலக புகழ்பெற்ற டிஸ்னி லேண்ட் எனப்படும் டிஸ்னி உலகம் தொடங்கப்பட்ட நாள்
டிஸ்னி உலகம்
இதே ஜூலை 16 ம் தேதி 1955 ம் ஆண்டு - டிஸ்னி லேண்ட் எனப்படும் டிஸ்னி உலகம் உலக புகழ்பெற்ற பிரம்மாண்டமான பொழுதுபோக்கு பூங்கா வால்ட் டிஸ்னி என்பவரால் அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு அருகில் தொடங்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரீஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய ஆறு இடங்களில் உள்ளன.
டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் (12,173 ஹெக்டேர் ; 47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது.
டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu