உலகப் பாரம்பரிய தினம் ஏப்ரல் 18 ஆம் தேதி என்று உங்களுக்குத் தெரியுமா?
![உலகப் பாரம்பரிய தினம் ஏப்ரல் 18 ஆம் தேதி என்று உங்களுக்குத் தெரியுமா? உலகப் பாரம்பரிய தினம் ஏப்ரல் 18 ஆம் தேதி என்று உங்களுக்குத் தெரியுமா?](https://www.nativenews.in/h-upload/2022/04/18/1518088-world.webp)
சர்வதேச நினைவுச் சின்னம் பாதுகாப்பு ஆலோசனை சபை சார்பாக 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று ஒரு கருத்தரங்கம் டுனிசியாவில் நடைபெற்றது. உலகளவில் நினைவுச் சின்னங்களைக் கொண்டாட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதனை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது. முதன்முதலாக 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது
ஒவ்வொரு ஆண்டும் "ஏப்ரல்-18" ஆம் தேதி உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று ஏப்ரல் 18 ஆம் தேதி. உலக பாரம்பரியம் என்றால் என்ன? ஒவ்வொரு நாட்டிற்கும் பெருமையும் புகழும் சேர்ப்பது அந்த நாட்டின் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்கள் (Historical Monuments), கல்வெட்டுகள் (Inscriptions), ஓவியங்கள் (Paintings) மற்றும் சிற்பங்களே (Sculptures) ஆகும்.
இந்தப் பாரம்பரிய சின்னங்கள் ஓர் இனத்தையோ, காலத்தையோ, நிலப்பரப்பையோ அல்லது நாட்டின் கலாசாரத்தையோ பிரதிபலிக்கக் கூடியவையனவாகும். உலகம் முழுவதிலும் உள்ள பாரம்பரியச் சின்னங்கள் மனிதகுலம் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய செல்வங்களாகும். இந்தப் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கவும், பராமரிப்பை ஊக்குவிக்கவும் சர்வதேச அளவில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி துனிசியக் குடியரசின் தலைநகரான துனிசியா நகரில் சர்வதேச மாநாடு மற்றும் நினைவுச்சின்னங்கள் (International Council for Monuments and Sites (ICOMOS) நடத்திய மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18 ஆம் தேதியை சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites) கொண்டாடுவதற்கான பரிந்துரையை மாநாட்டின் நிர்வாகக்குழு அங்கீகரித்தது.
இந்த நிர்வாகக் குழு இந்தச் சர்வதேச நினைவிடங்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான நடைமுறை ஆலோசனையையும் தேசியக் குழுக்களுக்கு (National Committees) வழங்கியது. இந்தப் பரிந்துரையை யுனெஸ்கோ நிறுவனம் (UNESCO) 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தன்னுடைய பொது மாநாட்டில் விவாதித்த பின்பு ஏற்றுகொண்டு அங்கீகரித்தது. இதன்படி உறுப்பு நாடுகள் (Member States) ஏப்ரல் 18 ஆம் தேதி உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடி வருகின்றன.
உலகில் 1,052 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ளன. இவற்றில் 814 சின்னங்கள் கலாச்சாரம் சார்ந்தவை; 203 சின்னங்கள் இயற்கை சார்ந்தவை; மீதி 35 சின்னங்கள் பொதுவானவை ஆகும். இத்தாலியில் 53 சின்னங்களும் சினாவில் 52 சின்னங்களும் உள்ளன.இந்தியாவில் 36 நினைவுச் சின்னங்கள் பாரம்பரிய சின்னங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று உலகப் பாரம்பரிய தினம். பொதுமக்கள் நம் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதில் ஒருங்கினைந்து செயலாற்ற வேண்டியது இன்றியமையாதது. கோவில்கள், மண்டபங்கள், திருக்குளங்கள், சிற்பங்கள், வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், நடுகற்கள், ஈமச்சின்னங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம். தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு ஊருக்கும் பொறுப்பு உள்ளது. இன்று எல்லோரும் பாரம்பரியம் பேணுவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்வோமா?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu