ஜப்பானில் மூன்று மாநிலங்களில் ஊரடங்கு

ஜப்பானில் மூன்று மாநிலங்களில் ஊரடங்கு
X

ஏப்ரல் 5 முதல் ஜப்பானில் மூன்று மாகாணங்களுக்கு புதிய அவசர கால ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட உள்ளது.ஜப்பானின் ஒசாகாவில் மோசமான நிலைமையைஅடுத்து, அங்கு கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொள்வதாகவும், கோவிட் பரவலை மீண்டும் பரப்பும் முயற்சியை தடுக்கவும் அரசாங்கம் கூறியுள்ளது.இந்த அவசரகால கட்டுப்பாடுகள் ஒசாகா, ஹியோகோ மற்றும் மியாகி ஆகிய மாநிலங்களுக்கு இது பொருந்தும், இது ஏப்ரல் 5 முதல் மே 5 வரை நீடிக்கும் என்று நாட்டின் மந்திரி யசுடோஷி நிஷிமுரா கூறினார்

கட்டுப்பாடுகளை மீறினால் 200,000 யென் அபராதம் விதிக்கவும் அல்லது கட்டுப்பாட்டை மீறியவர்களின் பெயர்களை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான பணிக்குழு கூட்டத்தில் இந்த நடவடிக்கைகளை இயக்குவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஒசாக்காவில் புதிய நோய்த்தொற்றுகள் சமீபத்திய நாட்களில் டோக்கியோவின் மிகப் பெரிய பெருநகரத்தை விட அதிகமாக உள்ளன. குறிப்பாக ஒசாகாவில், 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட நபர்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலை மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது

Tags

Next Story
ai healthcare technology